
செய்திகள் மலேசியா
15 பாலஸ்தீன கைதிகளை அழைத்து வர மலேசியா தயாராக உள்ளது: முஹம்மத் ஹசான்
சிரம்பான்:
காசாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட 15 பாலஸ்தீன கைதிகளை ஏற்றுக்கொள்ள மலேசியா தயாராக உள்ளது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை தெரிவித்தார்.
அக்குழுவை மலேசியாவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பேச்சுவார்த்தை, தேர்வு செயல்பாட்டில் உள்ளது.
மலேசியா மட்டுமல்ல, துருக்கி, எகிப்து, பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளாக இந்த முயற்சியில் பங்கேற்கின்றன.
கட்டார், எகிப்து, அமெரிக்காவின் முன்முயற்சியின் விளைவாக ஏற்பட்ட போர்நிறுத்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, விடுவிக்கப்பட்ட கைதிகள் காசா அல்லது அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாது.
இந்த விஷயத்தில், முன்னாள் கைதியைக் கொண்டுவருவதற்கான முடிவை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.
காரணம் அது நாட்டின் சர்வதேசப் பொறுப்பின் ஒரு பகுதியாகும்.
பெரிய இதயங்களைக் கொண்ட மலேசியர்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்
நெகிரி செம்பிலானில் நடந்த ஒரு விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm