
செய்திகள் மலேசியா
சுங்கைபூலோ கெஅடிலான் தொகுதி தலைவராக டத்தோஸ்ரீ ரமணன் போட்டியின்றி தேர்வு; உயர்மட்ட பதவிக்கான போட்டி குறித்து விரைவில் அறிவிப்பேன்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோ கெஅடிலான் தொகுதி தலைவராக டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இப்பதவிக்கு யாரும் போட்டியிடாததைத் தொடர்ந்து தாம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
கெஅடிலான் சுங்கை பூலோ தொகுதியை வழிநடத்துவதற்கு தம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பொறுப்பின் வாயிலாக மக்களின் நலனுக்காக நான் மேலும் கடுமையாகப் பாடுபடுவேன்.
இன வேறுபாடு கருதாது அரசாங்கத்தின் அனுகூலங்கள் இத்தொகுதி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வேன்.
சுங்கை பூலோவில் அம்னோ கிளைத் தலைவர்களுக்கான ரமலான் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுங்கை பூலோ அம்னோ தொகுதி தலைவர் டத்தோ மெகாட் பிர்டாவுஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே கட்சியின் உயர் மட்டத்தில் போட்டியிடுவதற்கான சாத்தியக் கூறு குறித்து கேட்டபோது,
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்ததாக டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.
நான் தலைவரின் ஆள். அவருடன் நான் கலந்துரையாடினேன். அனைத்து கிளை, தொகுதிகளுக்கான வேட்புமனு செயல் முறையும் இப்போதுதான் நிறைவடைந்துள்ளது.
உயர்மட்ட பதவிகளுக்கான போட்டிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. விரைவில் அதை அறிவிப்பேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm