நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்த பெண்ணுக்கு எதிராக 13 போலிஸ் புகார்கள்: ஐஜிபி

கோலாலம்பூர்:

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் எழுத்தாளரும், தொழில்முனைவருமான பெண் ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட முகநூல் பதிவு தொடர்பாக நாடு முழுவதும் 13 புகார்கள் போலிசாருக்கு கிடைத்துள்ளன.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் இதனை  தெரிவித்தார்.

நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி அனைத்து  புகார்களும் பெறப்பட்டது.

இது தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்த ஆரம்ப புகார் சிலாங்கூர், காஜாங்கில் உள்ள பெரனாங் போலிஸ் நிலையத்தில் 34 வயது உள்ளூர் நபர் ஒருவர் கடந்த சனிக்கிழமை அளித்தார்.

75 வயதான பெண் சந்தேக நபரின் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் தற்போது விசாரணை நடந்து வருகிறது, கேள்விக்குரிய கணக்கின் உரிமையாளரை அழைப்பதே எங்கள் ஆரம்ப நடவடிக்கை.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298 மற்றும் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி வழக்கின் ஆரம்ப விசாரணையை முடிக்க புகார்தாரரின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset