நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய எந்தவொரு தகவலையும்  எம்ஏசிசி தொடர்ந்து விசாரிக்கும்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி, 177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பணம்,  தங்கக் கட்டிகளைக் கண்டுபிடித்தது ஆகியவற்றுடன் தனது விசாரணை நின்றுவிடாது.

இதுவரை விசாரணை, வாக்குமூலம் பதிவு சுமூகமாக நடந்து வருகிறது.

புதிய சிக்கல்கள் எழுந்தால் அது குறித்து எம்ஏசிசி தொடர்ந்து விசாரிக்கும். இதனை  நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

வழக்கின் விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஒன்பதாவது பிரதமரால் இன்னும் பல விஷயங்களை கேள்விக்குட்படுத்தி பதிலளிக்க வேண்டியிருப்பதால் வாக்குமூலம் பதிவு தொடரும்.

யூஐடிஎம் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட டான்ஶ்ரீ அசாம் பாக்கி இதனை செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset