நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்

கோலாலம்பூர்:

பிரதமரின் பதவிக்கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு பதவிக்காலங்களாகக் கட்டுப்படுத்தும் திட்டத்தைப் பற்றி விவாதிக்கும்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆரோக்கியமான முறையில் விவாதிக்க வேண்டும்.

பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதாவின் கூற்றுப்படி, இந்த உன்னத நோக்கத்தை குறுகிய இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம் என்று பிரதமர் எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்டினார்.

இந்த நடவடிக்கை தூய்மையான நிர்வாகத்தின் தொடர்ச்சியையும், மிகவும் ஒழுங்கான அமைப்பையும் உறுதி செய்யும்.

மேலும் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கான இடமாக மாறும் அபாயத்தை ஏற்படுத்தும் அதிகார மையப்படுத்தலைத் தவிர்க்கும்.

உண்மையில் அண்டை நாடான இந்தோனேசியா போன்ற பல நாடுகள் ஏற்கனவே இந்த அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளன.

அதைத் தவிர, ஒரு தலைவரின் பிரதமர் பதவிக் காலத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கை, இன்றைய மற்றும் எதிர்கால புவிசார் அரசியல் நிலப்பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

இதற்கு புதிய சுவாசங்களுக்கும் தேசியத் தலைமையின் தொடர்ச்சிக்கும் இடமளிக்க அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் ஒரு உறுதிப்பாடு தேவைப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset