நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமான பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டல்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பயணி

கொழும்பு:

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகபர் கட்டுநாயக்க விமான நிலையப்  போலிசாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் போது, கொழும்பு அத்துருகிரிய பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் சிங்கப்பூரிலிருந்து ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில், அதிக மது போதையில் இருந்த சந்தேக நபரான பயணி விமானத்தில் பணிபுரிந்த இரண்டு விமானப் பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக இந்த சம்பவத்தை விமானத்தின் விமானியிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் அதனை கட்டுநாயக்க விமான நிலைய பணிமனைக்கு அறிவத்துள்ளார்.

அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்து கட்டுநாயக்க  போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset