நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்

லாஸ் ஏஞ்சலிஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரிலிருந்து புறப்பட்ட Lufthansa விமானம் எதிர்பாராவிதமாக போஸ்ட்டன் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.

Business class எனும் சொகுசுப் பிரிவில் அமர்ந்திருந்த பயணி ஒருவரின் iPad இருக்கைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டதால்...

461 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் தரையிறங்கவேண்டியிருந்தது.

ஆனால் இருக்கையில் சிக்கிக்கொண்ட iPad சிதைந்துபோன அறிகுறிகள் தெரிந்ததால் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு விமானம் திருப்பிவிடப்பட்டது.

iPad, அளவுக்கு அதிகமாகச் சூடேறினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்படலாம் என்பதால் அந்த அவசர முடிவு எடுக்கப்பட்டதாக Lufthansa விமான நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆதாரம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset