நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல் 

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வாயிலாக தங்கள் தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக பாகிஸ்தான் தொடர்பு அமைச்சர் கூறினார். 

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய வேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. 

அடுத்த 24 அல்லது 36 மணிநேரத்திற்குள் இந்தியா மாபெரும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் அரசு எண்ணுவதாக அந்நாட்டின் அமைச்சர் சொன்னார். 

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட வேளையில் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது. 

இருப்பினும், இந்த தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் நிலையான மற்றும் சுயேட்சை விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இஸ்லாமாபாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset