
செய்திகள் உலகம்
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
மாஸ்கோ:
உக்ரைன் உடன் 3 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்" மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் அதிபர் புதின் மே 8 முதல் 10 வரை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதனை உக்ரைனும் பின்பற்ற வேண்டும். ஆனால், இதனை மீறி உக்ரைன் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் ரஷ்யா அதற்கான தகுந்த பதிலடியை கொடுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்" உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் நான் மகிழ்ச்சியடையவில்லை. அது அவசியமில்லை. மிகவும் மோசமான நேரம். விளாடிமிர் , நிறுத்து! வாரத்துக்கு 5,000 வீரர்கள் உயிரிழக்கின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
வெற்றி தினம்: இந்த நிலையில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் மே 9 வெற்றி தினத்தையொட்டி புதின் இந்த போர்நிறுத்த அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். இதற்கு, பல்வேறு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm