
செய்திகள் உலகம்
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
நியூயார்க்:
பிரேசிலின் சாவ் பாவ்லோ (Sao Paulo) நகரிலிருந்து நியூயார்க் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் சலசலப்பு.
விமானிகள் அமரும் அறையினுள் செல்ல மூதாட்டி ஒருவர் முயற்சி செய்தார்.
ஏப்ரல் 24ஆம் தேதியன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
சம்பவத்தைக் காட்டும் காணொலியில் விமானச் சிப்பந்திகள் மூதாட்டியைச் சுற்றி நிற்பது தெரிகிறது.
அந்த நேரத்தில் விமானி கதவைத் திறந்து வெளியே வருகிறார்.
மூதாட்டி வலுக்கட்டாயமாக விமானி அறைக்குள் செல்ல முயற்சி செய்யும்போது சில நொடிகளில் ஆண் விமானச் சிப்பந்தி ஒருவர் அவரைக் கீழே தள்ளி விடுகிறார்.
விமானம் ஏன் தாமதமடைந்தது என்பதை அறிய விமானிகளிடம் அந்த மூதாட்டி பேச முயன்றதாக Aeroin எனும் விமான சஞ்சிகை குறிப்பிட்டது.
விமானத்தில் பயணம் செய்த மற்றொரு நபரும் உரக்கக் கத்தத் தொடங்கினார்.
மூதாட்டியும் ஆடவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் உள்ளூர்க் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சம்பவத்தால் விமானம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமடைந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm