நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம் 

டெஹ்ரான்: 

தெற்கு ஈரானின் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 406 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 406 பேர் காயமடைந்ததாக ஈரான் அரசு தகவல் தெரிவித்தது. ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இருப்பினும் வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Hundreds injured as 'massive' explosion hits Iran's port city Bandar Abbas  | News | Al Jazeera

ஈரான் துறைமுகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்தது.

துறைமுகத்தில் கண்டெய்னர் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

100 அடி உயரத்துக்கு வெடித்துக் கிளம்பிய கரும்புகையால் அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

வெடி விபத்தால் 100 அடி உயரத்துக்கு கரும் புகை எழும்பியது. கண்டெய்னரில் இருந்த தீப்பற்றக்கூடிய பொருள் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. வெடி விபத்தை தொடர்ந்து அருகில் இருந்த வாகனங்கள் பற்றி எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

பயங்கர வெடி விபத்து – கட்டடங்கள் இடிந்தன

பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தில் அருகில் இருந்த கட்டடங்கள் இடிந்தன. வாகனங்கள் நொறுங்கின. 

வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பெரிய குண்டுவெடிப்பு பல கிலோமீட்டர் சுற்றளவில் ஜன்னல்களை உடைத்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன, வெடிப்பைத் தொடர்ந்து காளான் மேகம் உருவாகுவதைக் காட்டும் காட்சிகள் ஆன்லைனில் பகிரப்பட்டன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset