நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி

சிட்னி:

முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸின் மகள் ஹன்னா தோமஸ் ஆஸ்திரேலிய தேர்தலில் கிரீன்ஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவார்.

ஹன்னா தோமஸ் கிரேண்ட்லர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்.

அவரது போட்டியாளர்களில் ஒருவர் தற்காலிகப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆவார். அவர் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

இது ஒரு அசாதாரணமான விஷயம். அதே நேரத்தில் மிகவும் உற்சாகமானது என்று அவர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ஹன்னா தாமஸ் 2009ஆம் ஆண்டு ஒரு சர்வதேச மாணவராக ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அவர் எப்போது ஆஸ்திரேலிய குடிமகனாக ஆனார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கிரேண்ட்லரில் போட்டியிடும் இளைய வேட்பாளர் இவர் தான். அல்பானீஸ் 1996 முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார்.

அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி, அந்தத் தொகுதியில் வாக்களிக்கும் வழிகாட்டி அட்டையில் தோமஸின் பெயரை இரண்டாவது தேர்வாகப் பட்டியலிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா ஒரு விருப்பத்தேர்வு வாக்களிப்பு முறையை ஏற்றுக் கொள்கிறது.

அங்கு வாக்காளர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப வேட்பாளர்களை தரவரிசைப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset