நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை

டோக்கியோ:

ஜப்பானின் ஒசாகா நகரில் மூத்தோர் atm இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை விதிக்கப்படவிருக்கிறது.

65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அது சட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களைக் கையாள அந்தப் புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.

சென்ற ஆண்டு மட்டும் ஜப்பானில் மோசடிச் சம்பவங்களில் இழக்கப்பட்ட தொகை இதுவரை இல்லாத அளவாகச் சுமார் 500 மில்லியன் டாலரை எட்டியது.

இதில் வயதானோர் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர்.

உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடிக்காரர்கள் வயதானோரை ஏமாற்றுகின்றனர்.

ஒசாகாவில் இந்த புதிய தடை ஆகஸ்ட் மாதம் நடப்புக்கு வரும்.

ஜப்பானில் அத்தகைய தடையை நடப்புக்குக் கொண்டுவரும் முதல் நகரம் ஒசாகா.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset