நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்

நியூயார்க் 

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர் எழுதிய கடிதம் ஏலத்தில் 300,000 பவுண்டுக்கு விற்பனையானது.

கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசியின் (Colonel Archibald Gracie) கடிதத்தை அடையாளம் தெரியாத ஒருவர் வாங்கினார்.

அது சுமார் 60,000 பவுண்டுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட ஐந்து மடங்கு அதிகத் தொகைக்கு அது விலைபோனது.

கடிதத்தில் தாம் சொகுசுக் கப்பலின் தரத்தை நிர்ணயிப்பதற்கு முன் தமது பயணத்தின் முடிவுக்குக் காத்திருப்பதாக கர்னல் கிரேசி எழுதியிருப்பார்.

வரவிருந்த பேரிடரை அவர் முன்கூட்டியே கணித்ததாகப் பலரும் கருதுகின்றனர்.

அந்தக் கடிதம் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி எழுதப்பட்டது. 5 நாள்கள் கழித்து கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்கியது.

டைட்டானிக்கில் எழுதப்பட்ட கடிதங்களில் ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட கடிதம் கர்னல் கிரேசி எழுதியது.

டைட்டானிக்கில் நியூயார்க்கிற்குச் சென்றுகொண்டிருந்த சுமார் 2,200 பயணிகளில் கர்னல் கிரேசியும் ஒருவர். அவர் உயிர் பிழைத்தார்.

பேரிடரில் 1,500க்கும் அதிகமானோர் மாண்டனர்.

ஆதாரம்: The New york Times

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset