நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடரும் அரிய வகை குரங்குகள் கடத்தலை தடுக்க மலேசியா - இந்தியா பேச்சுவார்த்தை

கோலாலம்பூர்:

மலேசியாவில் இருந்து வன உயிரினங்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவதை தடுப்பது தொடர்பாக, இரு நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வன உயிரினங்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது பற்றி சிபிஐ வன உயிரின குற்ற தடுப்பு, வருவாய் புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள், மலேசியா சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்தனர்.

அனைத்துலக அளவில் வன உயிரினங்கள் கடத்தலை தடுக்கும் நோக்கத்துடன் இன்டர்போல் ஏற்பாட்டின் பேரில் இந்த பேச்சு நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், மலேசியாவில் இருந்து தொடர்ந்து வன உயிரினங்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது பற்றி அதிகாரிகள் புகார் எழுப்பினர்.

சென்னை, திருச்சி, பெங்களூரு, மும்பை மட்டுமின்றி, சமீபத்தில் போர்ட் பிளேர், விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களிலும் வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதலான வன உயிரினங்களில், அதிகப்படியாக இருந்தவை, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்குகளே.

பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்புவது பற்றியும் அதிகாரிகள் விவாதித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset