நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்தியப் பெண் தொழிமுனைவோர்களை ஒன்றினைத்த முதல் Coffee Table நூலில் டாக்டர். சத்தியவதி இடம் பிடித்தார்

கிள்ளான்: 

மலேசிய இந்தியப் பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு,MiWEPs-இன் ஏற்பாட்டில் சிறந்த 85 பெண் தொழிமுனைவோர்களை ஒன்றினைத்த முதல் Coffee Table நூல் அறிமுக விழா சிறப்பாக நடைப்பெற்றது. 

இந்த 85 பெண் தொழில்முனைவோர்களின் பட்டியலில் வம்சம் கருதரிப்பு மையத்தின் நிர்வாக ஆலோசகரும் மலேசியாவில் Femi9 மாதவிடாய் நப்கின்களின் அதிகாரப்பூர்வ முகவராகவும் திகழும் டாக்டர் சத்தியாவதி இடம் பெற்றுள்ளார். 

நாட்டிற்கும் சமூகத்திற்கும்  குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய இந்தியப் பெண் தொழில்முனைவோர்களைக் கௌரவிக்கும் நோக்கத்திலும் அவர்களின் சாதனைகளை அடுத்த தலைமுறையினருக்கு வழிக்காட்டும் நோக்கத்திலும் இந்நூல் உருவாக்கப்பட்டது. 

இதனிடையே  85 பெண் தொழில்முனைவோர்களின் பட்டியலில் இடம்பிடித்த டாக்டர் சத்தியாவதி தன் மகள் கீர்த்தனாவுடன் இந்நூலைப் பெற்றுக் கொண்டதோடு வம்சம் கருதரிப்பு மையம் உருவாகுவதற்கு அடித்தளமிட்டது  தமது மகள் கீர்த்தனாதான் எனக் கூறினார்.

அவ்வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியத்தை அமைத்துக் கொடுக்கும் மருத்துவ ஆலோசகராக டாக்டர்.சத்தியவதி சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றார். 

அதிலும் குறிப்பாகத் திருமணமாகி 22 ஆண்டுகள் கழித்து ஒரு தம்பத்திக்குக் குழந்தைப் பாக்கியத்தை இவரது வம்சம் கருதரிப்பு மையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளின் கனவை நினைவாக்கி அவர்களின் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு உறுதுணையாகச் செயல்படுவதையே வம்சம் கருதரிப்பு மையம் தனது இலக்காகக் கொண்டுள்ளதாகவும் டாக்டர். சத்தியவதி கூறினார். 

கருதரிப்பு மையத்தின் நிர்வாக ஆலோசகராச் செயல்பட்டு வரும் இவர் தற்போது நாட்டின் முன்னணி பெண் வர்த்தகராவும் உருவெடுத்துள்ளார்.   

மலேசியாவில் Femi9 மாதவிடாய் நப்கின் தயாரித்து வெளியிடும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக டாக்டர் சத்தியாவதி திகழ்கின்றார். 

முன்னதாக, இந்த Coffee Table நூலை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணனின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து வைத்தார். 

இந்த நூல் வெளியீடு விழா சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கிள்ளானிலுள்ள Wyndham Hotel-இல் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset