
செய்திகள் மலேசியா
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
ஈப்போ:
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர் கொண்ட காணொளிகள் பயிற்சியின் ஓர் அங்கமாகும்.
ஈப்போ போலிஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் இதனை உறுதிப்படுத்தினார்.
உங்கு உமர் பாலிடெக்னிக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு, மாணவர் பணயக் கைதிகளாக்கிய சம்பவம் இன்று சமூக ஊடகங்களில் வைரலானது,.
இது 69ஆவது சிறப்பு நடவடிக்கை கட்டளை குழுவின் நெருக்கடி மேலாண்மை, கையாளுதல் பயிற்சியின் ஓர் அங்கமாகும்.
தேசிய பாதுகாப்பு குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட பயங்கரவாத நெருக்கடியை நிர்வகிப்பதிலும் கையாள்வதிலும் போலிஸ் , ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தயார் நிலையின் அளவை சோதிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சிறிய அளவிலான பயிற்சியாகும்.
பாலிடெக்னிக் பகுதியில் போலிஸ் விமானப்படை ஹெலிகாப்டர் உட்பட ஏராளமான போலிஸ், பாதுகாப்பு, சுகாதாரக் குழு வாகனங்கள் இருப்பது பயிற்சியின் ஒரு பகுதியாகும்.
ஆகவே இந்த சம்பவம், செயல்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். மேலும் தவறான ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 5:10 pm
எம்ஏசிசி தலைமையகத்தில் 6.5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியேறிய இஸ்மாயில் சப்ரி
March 17, 2025, 4:51 pm
பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:28 pm