
செய்திகள் மலேசியா
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
பெட்டாலிங் ஜெயா:
ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) மத்திய செயலவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, கட்சியின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் நெகிரி செம்பிலான் நிலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன்.
தமது வெற்றி குறித்து நம்பிக்கை ஊடகத்துடன் பகிர்ந்து கொண்ட அவர், தமக்கு வாக்களித்து, தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்பளித்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
முதல் முறை முதன்மை வெற்றி
“முதல் முறையாக மத்திய செயலவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெறுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. எனக்குத் துணை நிற்கும் கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் மற்றும் கட்சித் தலைவர் கோபின் சிங் டியோ ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என அருள் குமார் கூறினார்.
உதவித் தலைவர் என்ற புதிய பொறுப்பை மிகப்பெரிய நேர்மையான சேவையாகக் காண்பதாக அருண்குமார் குறிப்பிட்டார்.
கட்சியில் அதிகமான இந்தியர்களை இணைக்க வேண்டும்
“இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க, மேலும் அதிகமான இந்தியர்களை டிஏபி கட்சியில் இணைக்கப் பாடுபடுவேன். அதிகமான இந்தியர்கள் கட்சியில் இணைந்தால்தான், அரசியலில் இந்தியர்களின் குரல் ஆழமாக ஒலிக்க முடியும். அதோடு கட்சியில் அதிகமான இந்திய பேராளர்கள் உருவாக வேண்டும். அதற்கு நான் கடுமையாக உழைப்பேன்,” என உறுதியாக கூறினார்.
அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் டிஏபி, இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த பங்காற்ற வேண்டும். இந்த விவகாரத்தை தலைமைத்துவத்திடம் எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை முன்னெடுக்கவிருப்பதாகவும் அருள் குமார் உறுதியளித்தார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm