
செய்திகள் மலேசியா
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
பெட்டாலிங் ஜெயா:
ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) மத்தியச் செயலவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், அக்கட்சியின் முன்னாள் மூத்த உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் 2ஆம் முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“டிஏபி ஒரு பல்லினக் கட்சி எனச் சொல்லிக்கொண்டாலும், இந்தத் தேர்தல் அதன் முகமூடியை கிழித்தெறிந்துள்ளது. இது ஒரு சீனக் கட்சி என்பதையே மீண்டும் நிரூபித்திருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் சீனர்களாகவே இருக்கின்றனர். அனைவரையும் பிரதிநிதிக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள், ஆனால் வளர்ப்பது சீனர்களையே,” என நம்பிக்கை ஊடகம் அவரை தொடர்புக் கொண்டபோது இவ்வாறு கூறினார்.
தமிழர்களுக்கு மதிப்பில்லை
“85% தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்ந்தாலும், முழு அமைச்சராக ஒருவரும் நியமிக்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை. இது தமிழ்பேசும் மக்களை டிஏபி மதிக்கவில்லை என்பதற்கு தெளிவான சான்று. இந்தியர்களுக்கு நியாயமான இடமளிக்காமல், அவர்கள் ஆதரவை மட்டும் பயன்படுத்திக்கொண்டு விட்டுவிடுகிறார்கள்,” என்று அவர் விமர்சித்தார்.
இதேபோல், “இந்தியர்களை பிரதிநிதிக்கிறோம் என இனி டிஏபி கூறக்கூடாது. அது ஒரு பொய்யான வாக்குறுதியே ஆகும். தமிழ் பேசும் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி வழங்கப்படாததும், கட்சி தேர்தலில் பெரும்பான்மையாக சீனர்கள் வெற்றி பெற்றதும், இதற்கு உறுதியான சாட்சியாகும்,” என்று அவர் சாடினார்.
லிம் குவான் எங்கிற்கு சரிவு
அத்துடன், “டிஏபி தேர்தலில் லிம் குவான் எங், உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆலோசகர் பதவியில் அவர் இருக்கிறாரே தவிர, அதிலிருந்து எந்த முடிவும் எடுக்க முடியாது. அது முக்கியமான பதவி அல்ல,” என அவர் கருத்து தெரிவித்தார்.
“கோபின் சிங் டியோவுக்கு இரு தரப்பும் ஆதரவு அளித்ததால், அவர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,” எனவும் அவர் கூறினார்.
“டிஏபியின் வளர்ச்சியால் இந்தியர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்தக் கட்சி இந்தியர்களை ஏமாற்றக் கூடாது,” என தனது கருத்தை உறுதியாக வெளிப்படுத்தினார் இராமசாமி.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 5:10 pm
எம்ஏசிசி தலைமையகத்தில் 6.5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியேறிய இஸ்மாயில் சப்ரி
March 17, 2025, 4:51 pm
பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm