நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 4ஆவது நாளாக எம்.ஏ.சிசியிடம் வாக்குமூலம் வழங்கினார் 

கோலாலம்பூர்: 

தனது முன்னாள் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வாக்குமூலம் வழங்க எம்.ஏ.சி.சி தலைமையக அலுவலகத்திற்கு வந்ததாக தகவல்கள் வெளியானது

காலை மணி 9.52 மணிக்கு பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எம்.ஏ.சிசி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் 

டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்னும் எத்தனை நாட்களுக்கு எம்.ஏ.சி.சியிடம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரியவில்லை என எம்.ஏ.சி.சி வட்டாரம் தெரிவித்தது 

முன்னதாக, 170 மில்லியன் ரிங்கிட் பணம், 16 கிலோ தங்கக்கட்டி ஆகியவை இஸ்மாயில் சப்ரியின் மூத்த அதிகாரியின் வீடுகளில் சோதனையின் போது கண்டெடுக்கபட்டதாக எம்.ஏ.சி.சி இதற்கு முன் குறிப்பிட்டிருந்தது 

அதே சமயத்தில் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராக கருதப்படுவதாக எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டிருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset