நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளை முன்னிட்டு  கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே

கோத்தாபாரு:

நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 மில்லியன் வாகனங்கள் கிளந்தனுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே)  இயக்குனர் முகமட் மிசுவாரி அப்துல்லா இதனை கூறினார்.

இந்த நுழைவு கிளந்தானுக்குள் நுழையும் மூன்று இடங்களான பாசிர் பூத்தே, குவா மூசாங், ஜெலி ஆகியவற்றை உள்ளடக்கியது.

பெரும்பாலான மக்கள் விடுமுறையில் இருப்பதால் மார்ச் 28 முதல் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.

இதன் அடிப்படையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 மில்லியன் வாகனங்கள் விரைவில் கிளந்தானுக்குள் நுழையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நோன்பு பெருநாளுக்கு முன்பு ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கிளந்தானுக்குள் நுழைவது ஒரு சாதாரண சூழ்நிலையாகும்.

எனவே, எந்தவொரு தேவையற்ற சம்பவங்களையும் தவிர்க்க எப்போதும் கவனமாக இருக்குமாறு அனைத்து சாலை பயனர்களுக்கும் நினைவூட்டுகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset