நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்

கோலாலம்பூர்:

ரமலான் மாதத்தில் சாப்பிட்டதற்காக ஒரு சீனரை பலமுறை அறைந்த ஒரு ஆடவரின் செயலை தேசிய ஒருமைப்பாட்டுத் துறைஅமைச்சர் ஆரோன் அகோ டாகாங் கண்டித்தார்.

அவரின் இச்செயல் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தின் உணர்வைப் பிரதிபலிக்கவில்லை.

எனவே, ருக்குன் நெகாராவின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு நாட்டில் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது.

இன நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் வன்முறை, பாகுபாடு, பாரபட்சம் ஆகியவற்றை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

மேலும் ஒற்றுமை தொடர்பான பிரச்சினைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மலேசியர்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு சம்பவத்தையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset