நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூரில், இந்திய முஸ்லிம்கள் நடத்திய பிரம்மாண்ட இஃப்தார்:  ம ஜ கட்சித்  தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு 

ஜோகூர் பாரு:

ஜோகூர் பாருவில், இந்திய முஸ்லிம்கள் பிரம்மாண்ட இஃப்தார் ஒன்று கூடல்  நிகழ்ச்சியை நடத்தினர் .

ஜொகூர் மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டு - கேரள  வம்சாவளி தொழிலதிபர்களும் வணிகர்களும் இணைந்து கடந்த ஈராண்டுகளாக  பிரம்மாண்ட இஃப்தார் ஒன்று கூடலை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சித்  தலைவர்  மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய நிகழ்வில் ஜொகூர் ஆட்சியாளர் குடும்பத்தின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த இஃப்தார் ஒன்றுகூடலில் இன்று பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

May be an image of one or more people

குறிப்பாக திருக்குர்ஆனை மனப்பாடம்  செய்த இளம் உலமாக்கள், ஆதரவற்ற குழந்தைகள் என ஜோகூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நோன்பாளிகள்  வருகை தந்தனர்.

அவர்களுக்கு  ஜொகூரில் வசிக்கும் இந்திய -தமிழ்நாட்டு - கேரள  வம்சாவளி தொழிலதிபர்களும், வணிகர்களும்  ரமலான் உதவித்தொகைகளை - அன்பளிப்புகளை வழங்கினர்.

 இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை, ஆதரவற்ற குழந்தைகளுக்கும், இளம் மார்க்க அறிஞர்களுக்கும் அன்பளிப்புகளை  வழங்க செய்தனர்.

ஜொகூர் மாநிலத்தின் மிகப் பெரிய பள்ளியான மஸ்ஜித் சுல்தான் இஸ்கந்தர்  பண்டார் டத்தோ ஒன் பள்ளிவாசலில் அனைத்து பகுதிகளிலும், திறந்த வெளியிலும் என மொத்தம் 4 பகுதிகளில் மக்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

May be an image of 1 person

அவர்களின் சிறப்பான களப் பணிகளை தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வெகுவாக பாராட்டினர்.  

இந்த ஒன்று கூடலில் சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த மனிதநேய சொந்தங்களும், நிர்வாகிகளும் தலைவர்  அவர்களுடன் நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜொகரில் வாழும் செல்வந்தர்கள் ஒன்று கூடி , தமிழ்நாட்டு வம்சாவளியினரை ஒன்று திரட்டி நடத்திய இந்நிகழ்வை பாராட்டிய மு.தமிமுன் அன்சாரி, நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset