நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதத் தலைவர்கள் குற்றம் செய்தால் போலிசில் புகார் செய்யுங்கள் - நையிம் மொக்தார்

கோலாலம்பூர்:

மதத் தலைவர்கள் குற்றம் செய்தால் உடனடியாக போலிசில் புகார் செய்யுங்கள்.

காஜாங்கில் சமீபத்தில் ஒரு மதத் தலைவர், ஆசிரியர் ஒரு மாணவனை காயப்படுத்திய சம்பவம் குறித்து பிரதமர் துறையின் மத விவகாரங்கள் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட்நையிம் மொக்தார் இவ்வாறு கூறினார்.

எந்தவொரு மதத் தலைவரோ அல்லது ஆசிரியரோ குற்றம் செய்ததாகவோ அல்லது சட்டத்தை மீறிச் செயல்பட்டதாகவோ தெரிந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு குற்றத்தில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களின் சான்றிதழ்களை இடைநிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ சட்டம் அனுமதிக்கும்.

இந்தக் குழு சமூகத்தின் அறிவையும் நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்கிறது.

இதனால் மக்கள் புகாரை தாக்கல் செய்ய வேண்டும். போலிஸ்  நியாயமான விசாரணை நடத்தும் என்று நான் நம்புகிறேன்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான அங்கீகாரம் இடைநிறுத்தப்பட வேண்டும்.

தண்டனை இல்லாமல் இந்த அங்கீகாரத்தை திரும்பப் பெற விரும்பினால், அது கடினமாக இருக்கும், என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset