
செய்திகள் மலேசியா
சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனை 2 உட்பட நெகிரி செம்பிலானில் 10 முக்கிய திட்டங்களில் பொருளாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர்
தம்பின்:
சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனை 2 உட்பட நெகிரி செம்பிலானில் முன்மொழியப்பட்ட 10 முக்கிய திட்டங்களில் பொருளாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை பூர்த்தி செய்ய சிரம்பானில் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனை 2ஐக் கட்டுவதற்கான தேவை அவசரமாகியுள்ளது.
எனவே, இந்த முன்மொழிவை அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டுவருமாறு அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இதனால் அது மதிப்பாய்வு செய்யப்பட்டு விரைவுபடுத்தப்படும் என்று தம்பினில் நடந்த்அ சிறப்பு நெகிரி செம்பிலான் மேம்பாட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் பதிவில் கூறினார்.
சிறப்புக் கூட்டத்தில் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், மாநில மற்றும் மத்திய அரசுத் தலைமையும் கலந்து கொண்டனர்.
கல்வி, சுகாதாரம், சாலைகள், வெள்ளத் தணிப்பு, மேலாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு அம்சங்களைக் கையாளும் நீண்டகால திட்டமிடல் மற்றும் பல்வேறு மாநில மேம்பாட்டுத் திட்டங்களை மதிப்பிடுவதற்கான ஒரு தளமாக இக்கூட்டம் அமைந்தது.
கூட்டத்தில், திட்டமிடப்பட்ட ஒவ்வொரு திட்டமும் அமைச்சகங்களுக்கும் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
திட்ட செயல்படுத்தலை தாமதப்படுத்தும் அதிகாரத்துவ தொந்தரவுகள் குறைக்கப்பட வேண்டும். இதனால் மக்கள் விரைவில் நன்மைகளை அனுபவிக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm