நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பன் மொழி கற்கும் திட்டம் அறிமுகம் செய்ய வேண்டும்: டத்தோ காந்தாராவ்

கோலாலம்பூர்:

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பன் மொழி கற்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் தலைவர் டத்தோ காந்தாராவ் இதனை வலியுறுத்தினார்.

இவ்வறவாரியம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந்த 11 ஆண்டுகளின் பல சேவைகளை இந்த அறவாரியம் செய்துள்ளது.

அதன் அடிப்படையில் அறவாரியத்தின் 11ஆவது ஆண்டுக் கூட்டம் சிறப்பாக முறையில் நடைபெறுகிறது.

இக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கனுக்கு எனது நன்றி.

அரசாங்கத்தின் வாயிலாக கிடைக்கும் உதவிகள் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு எங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத் துறையில் இருக்க வேண்டும்.

அதே வேளையில் எங்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் பிரதமரின் பார்வைக்கு செல்ல வேண்டும். அதற்கு பிரதமருடன் சந்திப்பு நடத்த எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

உச்சக்கட்டமாக தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.

இதற்கு தீர்வுக் காண தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல மொழிகளைக் கற்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்ய வேண்டும்.

தெலுங்கு, மலையாளம் உட்பட தாய்மொழிகளை பயில்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் தேர்வும் இருக்க வேண்டும்.

மேலும் விடுமுறை நாட்களில் சீன மொழி டியூஷன் நடத்தப்பட வேண்டும் என்று டத்தோ காந்தராவ் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சண்முகம் மூக்கன், இக் கோரிக்கைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியை எடுப்பேன் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset