நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்: ஃபஹ்மி அறிவிப்பு

கோலாலம்பூர்:

கெஅடிலான் உதவித் தலைவர்  பதவிக்கு போட்டியிடப் போவதாக  அதன் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இன்று அறிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் தேர்தல் வரும் மே 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் உதவித் தலைவர் பதிவிக்கு போட்டியிட முடிவு எடுத்துள்ளேன்.

கட்சியில் உள்ள பல தலைவர்கள்,  நண்பர்களுடன் கலந்துரையாடிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு, கலந்துரையாடல்களில் கட்சிக்கு பங்களிக்க எனக்கு இடம் இருப்பதாகவு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது கண்டறியப்பட்டது.

நேரம் வரும்போது நான் எனது வேட்புமனுவை சமர்ப்பிப்பேன் என்று கோலாலம்பூரில் உள்ள பந்தாய் டாலாம், ரமலான் பசாருக்கு  சென்று பொதுமக்களுக்கு பேரீச்சம்பழம் , நோன்பு கஞ்சியை விநியோகித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தக் கட்சித் தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய தானும் தனது குழுவினரும் வெவ்வேறு உத்திகளை வகுப்பார்கள்.

கெடிலானில் போட்டி என்பது குடும்பத்திற்குள் நடக்கும் ஒரு போட்டி. மோசமான கூறுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான முறையில் போட்டியிட நாங்கள் பாடுபடுகிறோம்.

இது கட்சியின் தலைவரும்  பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வாரின் ஆலோசனையும் கூட என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset