நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லஞ்சம் பெற்றதாக கெடா எம்ஏசிசியின் இரு அதிகாரிகள் கைது

பெட்டாலிங் ஜெயா

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) கெடா மாநில பண்யாளர்களான இரண்டு அதிகாரிகள், லஞ்சம் பெற்றதற்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக ஒரு நபரிடமிருந்து, சம்பந்தப்பட்ட இருவரும் RM1,500 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை மதியம், அலோர் ஸ்டார் எம்ஏசிசி அலுவலகத்தில் வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில்காந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரம் கூறியது.

அலோர் ஸ்டார் நீதிமன்றத்தில், எம்ஏசிசி கோரிக்கையின் பேரில், நிதிபதி சிதி நூர்ஹிதாயா நூர், இருவரையும் ஐந்து நாட்கள் தடுத்து வைக்க அனுமதி வழங்கினார்.

கெடா எம்ஏசிசி இயக்குநர் அகமட் நிஜாம் இஸ்மாயில், இந்த கைது சம்பவத்தைக் உறுதிப்படுத்தியதோடு, 2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் 16(a)(b) பிரிவின் கீழ், லஞ்சம் கோருதல் மற்றும் பெறுதல் குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset