நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாம் கடினமாக உழைக்க வேண்டும்: கோபிந்த் சிங்

ஷா ஆலம்:

ஜசெக  மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கட்சியை வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும்.

அக் கட்சியின் புதிய தலைவர் கோபிந்த் சிங் டியோ இதனை வலியுறுத்தினார்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் இரண்டிலும் நாம் இருப்பதால் ஜசெக அதன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அறைகூவல்களை எதிர்கொள்வதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் கட்சியை வலுப்படுத்த ஜசெக நிறைய கடமைகளை செய்ய வேண்டியுள்ளது.

இதில்தான் எனது முழு  கவனம் இருக்கும். மக்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதை நிறைவேற்ற தொடர்ந்து கடினமாக உழைப்போம். முன்னோக்கிச் செல்வோம்.

மேலும் என்னைத் தேர்ந்தெடுத்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset