
செய்திகள் மலேசியா
டிஏபி உச்சமன்ற தேர்தல்: வெற்றியை தழுவிய ஒரே இந்திய பெண் கஸ்தூரி பட்டு
பெட்டாலிங் ஜெயா:
ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) உச்சமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே இந்திய பெண் என்ற பெருமையை கஸ்தூரி பட்டு பெற்றுள்ளார்.
டிஏபியின் மூத்த தலைவர், காலஞ்சென்ற பட்டு அவர்களின் மகளான கஸ்தூரி, தன்னுடைய வெற்றிக்கு பின்னர், அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்ளவதாக நம்பிக்கை ஊடகம் அவரை தொடர்புக் கொண்டபோது இவ்வாறு கூறினார்.
ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றி
தம்மை ஆதரித்து, முழுமையான ஆதரவு வழங்கி, பிரசாரத்தில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த வெற்றியால் தான் மட்டுமல்ல, அனைத்து பெண்களும், குறிப்பாக இந்திய சமூகத்திற்கும் பெருமை என அவர் மேலும் சொன்னார். .
அடுத்தகட்டத்திற்கான தனது திட்டங்களை பகிர்ந்து கொண்ட கஸ்தூரி, தலைமைத்துவம், சமூக மேம்பாடு, மற்றும் திறன் பயிற்சிகளை தமிழில் முன்னெடுக்க முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர் செயல்திட்டங்களை முன்னெடுப்பேன்
" அதோடு நாட்டில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களுடனும் இணைந்து செயல்படுவதே என் நோக்கம். இது அனைத்து சமூகத்தினருக்கும் பயன்படும் வகையில் இருக்கும்." என்றார்.
“இந்தியர்கள் மட்டுமல்ல, அனைவரும் சமமாக கூடி இணைந்து செயல்பட வேண்டும். குடியுரிமை தொடர்பான சிக்கல்களை முன்வைத்து, அவற்றை தீர்க்க பாடுபட வேண்டும். மக்கள் உறவை மேலும் வலுப்படுத்த, ஒரே சிந்தனைக் கொண்ட கட்சியுடம் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தவும், அவர்கள் முன்னேறுவதற்கு வழிவகுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவும் உறுதி பூண்டுள்ளதாக கூறிய அவர், தனது வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் தெரிவித்தார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm