நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெகவின் தலைவரானார் கோபிந்த் சிங்; குவான் எங் ஆலோசகர், அந்தோனி லோக் செயலாளராக நீடிக்கிறார்

ஷா ஆலம்:

ஜசெகவின் புதிய தலைவராக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் பொறுப்பேற்றுள்ளார்.

ஜசெக கட்சித் தேர்தல் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்று முடிந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற 30 பேரை கொண்டு புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

இதில் ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற கோபிந்த் சிங் ஜசெகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சோங் சியெங் ஜென், தியோ நீ சிங், இங் சூயி லிம், ஷாரெட்ஸான் ஜோஹன், ஜே. அருள்குமார் ஆகியோர் உதவித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இளைஞர், விளையாட்டு  அமைச்சர் ஹன்னா யோ,  புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் ஆகிய மூன்று துணை பொதுச் செயலாளர்களாக தேர்வு பெற்றனர்.

முன்னாள் ஜசெக தலைவர் லிம் குவான் எங் கட்சியின் தேசிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset