நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஹிமா யாருக்கும் போட்டி இல்லை; ஆலயங்களை ஒருங்கிணைப்பதே எனது இலக்கு: டத்தோ சிவக்குமார்

செனவாங்:

மஹிமா யாருக்கும் போட்டி இல்லை. ஆலயங்களை ஒருங்கிணைப்பதே எனது முதன்மை இலக்காகும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

நாட்டில் உள்ள இந்து ஆலயங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் மஹிமாவின் முதன்மை நோக்கமாகும்.

இதன் மூலம் ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இதன் அடிப்படையில்தான் நாடு தழுவிய நிலையில் மஹிமாவின் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இன்று நெகிரி செம்பிலான் பகாவ் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது.

இரண்டாவது கூட்டம் செனவாங் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.

இரு இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலய நிர்வாகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இங்குள்ள பல ஆலயங்கள் நிலப்பிரச்சினை எதிர்நோக்கி வருகின்றன. அதைவேளையில் நிலப்பட்ட பிரச்சினையும் உள்ளன.

இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதற்கான வழிகள் முன்னெடுக்கப்படும்.

இதற்கு ஆலய நிர்வாகங்கள் எல்லாம் ஒரு குடையின்கீழ் இணைய வேண்டும். இது இக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

அதேவேளையில் இந்து சமய ஆலயங்களுக்கு என தனி புளூபிரிண்ட் தயார் செய்ய வேண்டும்.

இந்த விவகாரமும் இக்கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset