நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள் சமுதாயத்தை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தக்கூடிய பல விஷயங்களைக் கொண்டுள்ளன: டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை:

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள் சமுதாயத்தை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தக்கூடிய பல விஷயங்களைக் கொண்டுள்ளன.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழ்நாட்டு அமைச்சர்கள்,  கல்விமான்கள் உலகப் பேரறிஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், கவிப்பேரரசின் மகாகவிதை எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை  முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வெளியிட முதல் நூலை நான் பெற்றுக் கொண்டேன்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள் கவிஞர் என்கின்ற எல்லையைத் தாண்டி வாழ்வியலுக்குத் தேவையான  சமுதாயத்தை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தக்கூடிய பல விஷயங்களைக் கொண்டுள்ளன. 

தமிழுக்கும் இலக்கியத்திற்கும் மகுடம் சூட்டும் விழாவாக அமைந்த இந்த பன்னாட்டுக் கருத்தரங்கை
தமிழ்நாட்டு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து வைத்தார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset