நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சண்டையில் இரண்டு இந்திய ஆடவர்கள் வெட்டிக் கொலை: கிள்ளான் செந்தோசாவில் பரபரப்பு

கிள்ளான்:

கிள்ளான் தாமான் செந்தோசாவில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய ஆடவர்கள்  வெட்டிக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் சா ஹூங் ஃபாங் இதனை கூறினார்.

நேற்று இரவு 10.50 மணியளவில் நடந்த சண்டையில் காயமடைந்தவர்கள் குறித்து போலிஸுக்கு அழைப்பு வந்தது.

தாமான் செந்தோசாவின் ஜாலான் உலுபலாங் 28இல் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட வளாகத்தில் இரண்டு பாதிக்கப்பட்டவர்களை கத்தியால் வெட்டினர்.

அவர்களில் ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவர் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு வளாகத்தில் இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது.

மற்றொரு பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மரணமடைந்தவர்கள் 36, 38 வயதுடைய உள்ளூர் ஆடவர்களாவர். அவர்களில் ஒருவர் குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலிசார் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

இந்தச் சண்டை குண்டர் கும்பல் சம்பந்தப்பட்டதா என்பதையும் போலிசார் இன்னும் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset