
செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை மீண்டும் எம்.ஏ.சி.சியிடம் வாக்குமூலம் வழங்குவார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை மீண்டும் வாக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரியவுள்ளதாக எம்.ஏ.சி.சி வட்டாரம் தெரிவித்தது
தாம் எதிர்நோக்கியுள்ள ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கூடுதல் விளக்கங்களையும் ஆதாரங்களையும் வழங்குவதற்காக பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எம்.ஏ.சி.சிக்கு உதவுவார் என்று சொல்லப்படுகிறது
எம்.ஏ.சி.சி அதிகாரிகள் அவரிடமிருந்து விளக்கங்களைப் பெற்ற வேளையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள்
முன்னதாக, ஊழல் நடவடிக்கை, கள்ளப்பண பரிமாற்றம் ஆகியவை உட்படுத்திய 170 மில்லியன் ரிங்கிட் ஊழல் விவகாரம் தொடர்பாக டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சந்தேக நபராக வகைப்படுத்தப்படுவதாக கடந்த மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டிருந்தார்
எம்.ஏ.சி.சி இதுவரை 36 பேரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am