
செய்திகள் உலகம்
இலங்கை அதிபர் ஏற்பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்வு
கொழும்பு:
புனித ரமலான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இஃப்தார் நிகழ்வு நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாமியர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர்.
செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமலான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 மணிக்கு நோன்பு திறக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து விருந்துபசரிப்பு நடைபெற்றது.
தனது அழைப்பை ஏற்று இஃப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டலுவல்கள், மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுஃப், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 1:46 pm
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 200க்கும் அதிகமான கள்ளக்குடியேறிகள்
March 17, 2025, 10:32 am
விமான பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டல்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பயணி
March 15, 2025, 11:55 am
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்
March 15, 2025, 10:55 am
பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு
March 15, 2025, 10:54 am
கால்சட்டையில் ஆமையை மறைத்து வைத்த பயணி
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm