
செய்திகள் மலேசியா
வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்: டத்தோ அப்துல் ஹமித்
ஈப்போ:
வறுமை நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்க வேண்டும்.
எஹ்சான் வர்த்தக குழுமத்தின் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை வலியுறுத்தினார்.
பெரும்பாலும் பெருநாள் காலங்களில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த உதவிகளை அரசு சாரா இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வழங்குவதின்வழி வசதி குறைந்த மக்களின் சுமையைக் குறைக்க வழி செய்யும்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஈப்போவில் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள், நிதி உதவி வழங்கியப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு ரமலான் உதவியை தமது நிறுவனம் நாடு முழுவதிலும் வழங்கி வருகிறது.
இந்த சேவை தமது நிறுவனம் கடந்த 32 ஆண்டுகள் வருகிறது என்ற அவர் இந்த நோன்பு காலத்தில் இதுபோன்ற சேவை அரசு சாரா இயக்கங்கள் ஆங்காங்கே செய்து வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறினார்.
இந்த சேவை தொடர வேண்டும் இதன்வழி வசதி குறைந்த மக்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த நிகழ்வு பேரா மாநில இந்திய முஸ்லிம் இயக்கம் (பிரிம்) ஆதரவுடன் நடைபெற்றதாகவும் பிரிம் இயக்கம் மேற்கொண்டு வரும் சமுகப் பணியை அவர் வெகுவாக பாராட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am
ஹரி ராயா அய்டில்ஃபித்ரி மடானி 2025 கொண்டாட்டம்: மலாக்கா உபசரணை மாநிலமாக அறிவிப்பு
March 17, 2025, 10:51 am
டிஏபி உச்சமன்ற தேர்தல்: வெற்றியை தழுவிய ஒரே இந்திய பெண் கஸ்தூரி பட்டு
March 17, 2025, 10:30 am
தொடரும் அரிய வகை குரங்குகள் கடத்தலை தடுக்க மலேசியா - இந்தியா பேச்சுவார்த்தை
March 17, 2025, 10:30 am