
செய்திகள் உலகம்
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்
ஒட்டாவா:
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார்.
கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரியில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். இதனையடுத்து லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கனடா பொருளாதார, அரசியல் பதட்டங்களை எதிர்கொண்டு வரும் காலகட்டத்தில் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளார்.
முன்னதாக பிரதமராக தேர்வான பின்னர் கார்னி ஆற்றிய வெற்றி உரையில், “டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமலில்தான் இருக்கும்” என்று உறுதிபட தெரிவித்தார்.
மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 10:55 am
பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு
March 15, 2025, 10:54 am
கால்சட்டையில் ஆமையை மறைத்து வைத்த பயணி
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm
அங்கோர் வாட் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு
March 14, 2025, 7:44 am
சவுதி வழங்கிய 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்கள் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கும் பகிரப்பட்டது
March 13, 2025, 4:55 pm
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
March 13, 2025, 12:50 pm