
செய்திகள் உலகம்
பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு
லாகூர்:
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்ளாட்டு விமானம் லாகூர் விமான நிலையத்தில் லேண்டிங் கியரின் பின்புற சக்கரங்களில் ஒன்று இல்லாத நிலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்றபோதிலும் பயணிகளுக்கு எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான உள்நாட்டு விமானம் கராச்சியில் இருந்து லாகூருக்கு புறப்பட்டுச் சென்றது.
பயணிகளுடன் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர்தான் லேண்டிங் கியரில் உள்ள 6 சச்கரங்கில் பின்புறம் இருக்கும் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது.
விமானம் காராச்சியில் இருந்து புறப்படும்போது கழன்று விழுந்ததா? அல்லது லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கழன்று விழுந்ததா? எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம் கராச்சியில் இருந்து புறப்படும்போது ஒரு சக்கரம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:47 pm
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm