நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கால்சட்டையில் ஆமையை மறைத்து வைத்த பயணி

நியூ ஜெர்சி:

அமெரிக்காவின் நியூ ஜெர்சி விமான நிலையத்தில் ஆமை ஒன்றை கால்சட்டையில் மறைத்து வைத்திருந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

ஆடவர் மீது அதிகாரி பாதுகாப்புச் சோதனை நடத்தியபோது அவரது கால்சட்டையில் பொருள் ஒன்றை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

அதிகாரி அதைப் பற்றி கேட்டபோது, 12 செண்ட்டிமீட்டர் நீளமுள்ள ஆமையை ஆடவர் தமது கால்சட்டையிலிருந்து வெளியே எடுத்தார்.

சிவப்பு நிறக் காதுகள்கொண்ட அந்த வகை ஆமை பிரபலபான ஒரு செல்லப்பிராணி என்றார்.

ஆமை அவரது செல்லப்பிராணியா அல்லது அதனை அவர் ஏன் வைத்திருந்தார் என்பது தெரியவில்லை.

அதிகாரிகள் ஆமையைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையக் காவல்துறையினர் ஆடவரைத் தடுத்து வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

உயிருள்ள விலங்கினைக் கால்சட்டையில் மறைத்து வைக்க பயணி ஒருவர் முயன்றுள்ளது இதுவே முதன்முறையாக இருக்கலாம் என்று போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset