நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அங்கோர் வாட் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு

கம்போடியா:

அங்கோர்வாட்டில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது.

அதை 'ஸ்கேன்' செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் பொருந்துகிறது.

தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது.

அந்த சிலை, 12 அல்லது 13-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.

சிலையின் அங்கமாக கருதப்படும் 29 துண்டுகளுடன் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. 

1.16 மீட்டர் உயரம் கொண்ட அச்சிலை, Bayon கலை வடிவத்தில் இருக்கின்றது.

சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தொல்லியல்துறை அறிஞர் Neth Simon தெரிவித்தார். 

கலாசார அமைச்சரின் ஒப்புதலுக்குப் பின் தலையையும், உடற்பகுதியையும் பொருத்தி, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விருப்பம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset