
செய்திகள் உலகம்
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
சிக்காகோ:
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கழிப்பறைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பைகளும் துணிகளும் நிரம்பியிருந்ததாக அவ்விமானம் மீண்டும் திருப்பிவிடப்பட்டது.
342 பயணிகள் வரை இருக்கக்கூடிய அந்த விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் சம்பவம் நடந்தது.
12 கழிப்பறைகளில் 8-யைப் பயன்படுத்த முடியாது என்று விமான ஊழியர்கள் அறிந்தனர்.
பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு விமானத்தைத் திருப்பிவிட்டதாக ஏர் இந்தியா கூறியது.
சிக்காகோநகருக்குத் திரும்பிய பயணிகளுக்கு தங்குமிடமும் மாற்று விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தும்படி ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm
அங்கோர் வாட் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு
March 14, 2025, 7:44 am
சவுதி வழங்கிய 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்கள் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கும் பகிரப்பட்டது
March 13, 2025, 12:50 pm
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: இலங்கை முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am