
செய்திகள் உலகம்
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: இலங்கை முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
கொழும்பு:
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளது.
நேற்றுமுன்தினம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் குறித்த வேலைநிறுத்தம் அமுலில் இருக்கும்.
வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், அவசர மருத்துவ சேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் வைத்தியசாலைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம், முப்படை வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்றும் குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm
அங்கோர் வாட் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு
March 14, 2025, 7:44 am
சவுதி வழங்கிய 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்கள் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கும் பகிரப்பட்டது
March 13, 2025, 4:55 pm
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am