
செய்திகள் மலேசியா
அரசியல் தலைவர்கள் ஒற்றுமையின் பாலங்களாக செயல்பட வேண்டும்; தீப்பொறிகளாக அல்ல: பகாங் சுல்தான் அறிவுறுத்து
குவாந்தான்:
நாட்டில் அனைத்து தலைவர்களும் குறிப்பாக அரசியல் தலைவர்கள் மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பாலமாகச் செயல்பட வேண்டும்.
மாறாக நீண்ட காலமாக இருந்து வரும் நல்லிணக்க உறவை நெருப்பாக பற்றவைக்க வேண்டாம் என்று பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் வலியுறுத்தினார்.
இனம், மதம், ஆட்சியாளர்கள் பிரச்சினையில் தலைவர்கள் விவாதம் செய்வதை நிறுத்த வேண்டும்.
இதனால் சமூகத்திற்குள் மோதல்கள் ஏற்படும். இந்த அரசியல் மேடை வலிமிகுந்த நாடகம் இல்லாமல் அமைதியாக இருக்கட்டும்.
அவமானங்களையும் வெறுப்பையும் பயன்படுத்தி ஏகபோகப் பேச்சுகளுக்குப் பதிலாக, உங்கள் மனதை விட்டு உரையாடுங்கள்.
தலைவர்கள் சமாதானத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பதே பொறுப்பு, மோதலைத் தூண்டுபவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திய பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை நான் வரவேற்கிறேன்.
ஜெராண்டுட்டில் உள்ள புதிய கம்போங் துரியன் ஹிஜாவ் மசூதி, ரஹ்மான் இப்னு அவுஃப் மசூதியின் திறப்பு விழாவில் நேற்று தலைமை தாங்க ஒப்புக்கொண்டபோது அல் - சுல்தான் அப்துல்லா இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm