நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் நாளை பதிவு செய்யப்படும்: அஸாம் பாக்கி

கோத்தா கினபாலு:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலத்தை எம்ஏசிசி நாளை மீண்டும் பதிவு செய்யும்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி இதனை தெரிவித்தார்.

ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவ அவரிடம் வாக்குமூலம் பெறவுள்ளது.

சம்பந்தப்பட்ட பெரா நாடாளுமன்ற உறுப்பினர் புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜராவார்.

மேலும் இஸ்மாயில் சப்ரியின் நோய்வாய்ப்பட்ட விடுப்பு சான்றிதழ் நாளை காலாவதியாகிவிடும்.

தற்போதைய விசாரணையின் அடிப்படையில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அவர் ஆஜராவார்.

மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக கூடுதல் சாட்சிகள் விரைவில் எம்சிஎம்சி அலுவலகத்திற்கு படிப்படியாக அழைக்கப்படுவார்கள்.

இன்று கோத்தா கினாபாலுவில் எம்சிஎம்சி,  கோத்தா கினாபாலு நகர மண்டபம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதையும், நோன்பு துறக்கும் விழாவையும் நேரில் கண்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் அசாம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset