நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 ஏரா எஃப்எம் அறிவிப்பாளர்கள் மீது எம்சிஎம்சி மேலும் நடவடிக்கை எடுக்காது - ஃபஹ்மி

கோலாலம்பூர்:

3 ஏரா எஃப்எம் அறிவிப்பாளர்கள்  மீது மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி மேலும் நடவடிக்கை எடுக்காது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.

இந்து மதத்தை அவமதித்ததாக நம்பப்படும் மூன்று எரா எஃப்எம் தொகுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதனால் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன்  அடிப்படையில் எம்சிஎம்சி அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

ஏரா எஃப்எம் ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருக்கும் வானொலி நிலைய உரிமையாளருமான ஆஸ்ட்ரோ மீது  எம்சிஎம்சி 250,000  ரிங்கிட் அபராதம் விதித்தது.

இருந்த போதிலும் அவர்கள் மீதும், ஆஸ்ட்ரோ மீதும் போலிசார் நடவடிக்கைகளை எடுக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால் எம்சிஎம்சி அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்பதை இங்கு  தெரிவிக்கிறேன் என்று ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset