
செய்திகள் மலேசியா
இனவாத பதிவுகளை மீண்டும் பதிவேற்றியதற்காக ஜம்ரியை எம்சிஎம்சி விசாரிக்கிறது
கோலாலம்பூர:
முகநூலால் நீக்கப்பட்ட பின்னர், ஜம்ரி வினோத் மீண்டும் பதிவேற்றிய ஒரு பதிவை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் விசாரித்து வருகிறது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஆராய நாட்டின் இணைய ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை அந்த நபர் மீண்டும் பதிவேற்றியதைத் தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை எம்சிஎம்சி இன்னும் அறிவிக்கவில்லை.
அந்த உள்ளடக்கம் சட்டம் அல்லது தளத்திற்கான சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக மெட்டா ஒப்புக்கொண்டால், அவரது உள்ளடக்கம் அகற்றப்படும்.
எனவே, எம்.சி.எம்.சி விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கோலாலம்பூரில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தைப்பூசத்தின் போது காவடி ஏந்துபவர்களை பேய் பிடித்தவர்கள் அல்லது குடிபோதையில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டு ஜம்ரியின் முகநூல் பதிவு ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடக தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அது அகற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் தனது பேஸ்புக் கணக்கில் அந்த உள்ளடக்கத்தை மீண்டும் பதிவேற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm