நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மனைவியிடம் வாக்குவாதம் செய்ய இருநூறு கிலோமீட்டர் வரை பயணம் செய்த ஆடவன்: மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்தார் 

பெங்கொக்: 

தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்யவும் அவரின் கள்ளக் காதலனைக் கொலை செய்யவும் ஆடவர் ஒருவர் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார் 

சமூட் ப்ராகான் நகரிலிருந்து ஆடவன் ஒருவன் தனது மோட்டார் சைக்கிள் மூலம் பாக் சோங் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். 

அங்கு தனது  மனைவியிடம் வாக்குவாதம் செய்த அவ்வாடவன் சினம் கொண்டு தனது மனைவியின் துணையை கத்தியால் குத்தி கொலை செய்தார். 

தனது மனைவியை மீண்டும் தனது இல்லத்திற்கு கொண்டு வர அவர் முயற்சி செய்தார். இருப்பினும் முயற்சி தோல்வி அடையவே தான் இந்த விபரீத காரியத்தில் இறங்கியதாக கைதான நபர் விளக்கமளித்தார். 

பிட்டி என்று பெயருடைய கைது செய்யப்பட்ட நபர் கொலை குற்றச்சாட்டு, ஆயுதம் ஏந்திய குற்றச்சாட்டு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset