
செய்திகள் மலேசியா
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவில் டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்
ஈப்போ:
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் மாசி மகத் திருவிழாவில் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்.
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் மாசி மகத் திருவிழாவில் கலந்து கொள்ள அழகிய பங்கோர் தீவிற்கு வந்ததில் மகிழ்ச்சி.
நேற்று இரவு பங்கோர் தீவில் உள்ள பாசிர் போகா ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுக்கப்பட்டு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படட்டது.
அம்மனின் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் பெருகிவர, ஊர்வலமாய் வந்த அம்மனைக் காண ஆனந்தமாய் இருந்தது.
கருணைக் கடல்தேவி காளியம்மா
எங்கள் கவலைகள் தீர்த்திட வாருமம்மா..
காணும் பொருள்தனில் நீதானம்மா
என்றும் கண்டுகொண்டேன் உந்தன் அருள்தானம்மா.
என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm