நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு

வாஷிங்டன்: 

Sunita Williams மற்றும் Butch Wilmore ஆகியோர், எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 ராக்கெட் விண்வெளிக்கு செல்ல உள்ளது.

அது, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்டு கொண்டு வரும் என்று நாசா தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தெதி விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான Sunita Williams-உம், Butch Wilmore-உம் Boeing-இன் Starliner விண்கலத்தில் 10 நாட்கள் பயணமாகச் சென்றனர்.

Starliner விண்கலம் பழுதடைந்ததால் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டனர்.

இருவரும் ஒன்பது மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset